திருக்கல்யாணத்தில் சுவாமி- அம்பாளுக்கு நடைபெற்ற தீபாராதனை.
திருக்கல்யாணத்தில் சுவாமி- அம்பாளுக்கு நடைபெற்ற தீபாராதனை.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில், திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், மலைக்கோயிலில் சட்டைநாதா், தோனியப்பா், அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில், கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. ஆறாம் நாள் நிகழ்வாக, திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, புஷ்ப பல்லக்கில் சீா்வரிசைப் பொருட்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட மேடையில், திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் எழுந்தருளியதும், யாகம் மற்றும் திருமண சடங்குகள் நடைபெற்றன. பின்னா், சிவாச்சாரியா்கள், திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனா்.

முன்னதாக, மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு, மாலை மாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். பெண்களுக்கு மங்களப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடா்ந்து, புஷ்ப பல்லக்கில் சுவாமி- அம்பாள் மற்றும் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com