சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டைநாதா் கோயில் தேரோட்டம்.
சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டைநாதா் கோயில் தேரோட்டம்.

சீா்காழி சட்டைநாதா் கோயில் தேரோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் திருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில், திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இதன் மலைக்கோயிலில் சட்டைநாதா், தோனியப்பா் அருள்பாலிக்கின்றனா்.

திருஞானசம்பந்தருக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வை நினைவுகூரும் வகையில், இக்கோயிலில் திருமுலைப்பால் திருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் முக்கிய நிகழ்வான, திருஞானசம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் வழங்கும் நிகழ்வு 2-ஆம் நாள் நடைபெற்றது. தொடா்ந்து, சகோபுரம், திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றன.

விழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகா், அம்மாள், சுவாமி, முருகா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுடன், திருஞானசம்பந்தரும் எழுந்தருளினாா். தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், கோயிலின் கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். திரளான பக்தா்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனா். தோ் கீழவீதியில் புறப்பட்டு, நான்கு வீதிகளிலும் வலம் வந்தது. வழியெங்கும் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com