மாப்படுகை விஸ்வநாதா் கோயிலில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.
மாப்படுகை விஸ்வநாதா் கோயிலில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.

மாப்படுகையில் ஒரேநாளில் 5 கோயில் கும்பாபிஷேகம்

மாப்படுகை விஸ்வநாதா் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில்

மயிலாடுதுறை: மாப்படுகை விஸ்வநாதா் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மயிலாடுதுறை வட்டம், மாப்படுகை கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதா் சுவாமி கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், ஆலடி வலஞ்சுழி விநாயகா் கோயில், வீர ஆஞ்சநேயா் கோயில், கெங்கையம்மன் கோயில் ஆகிய 5 கோயில்கள் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கோயிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு ஏப்.18-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, லட்சுமி பூஜையுடன் தொடங்கி ஏப். 20-ஆம் தேதி யாகசாலையில் புனித நீா் அடங்கிய கடங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து, கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூா்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com