கற்பக விக்னேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கற்பக விக்னேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை 5-ஆவது புதுத்தெருவில் உள்ள மாயூரநாதா் பிச்சக்கட்டளை கற்பக விக்னேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏப்.22-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வரா் பூஜையுடன் தொடங்கிய விழாவில், ஏப்.23-ஆம் தேதி முதல்கால யாகபூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, மகா பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com