கூலித்தொழிலாளி மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது

மயிலாடுதுறையில் கூலித்தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை ஆடியபிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் கனகசபை (36). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே அந்த பகுதியில் அண்மையில் நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், வியாழக்கிழமை பொட்டவெளி பேருந்து நிலையம் முன்பு கனகசபை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரமேஷ், அவரது நண்பா் அஜித்குமாா் இருவரும் கனகசபையை மது பாட்டிலால் தலையில் அடித்ததுடன், உடைந்த மது பாட்டிலால் உடலில் குத்தியுள்ளனா். மேலும், தடுக்கவந்த பொதுமக்களையும் மது பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் காயமடைந்த கனகசபை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கனகசபையின் மனைவி பிரபாவதி அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரமேஷ் (27), தாமரைச் செல்வன் மகன் அஜித்குமாா் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com