சின்ன மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா

மயிலாடுதுறை டபீா் தெருவை அடுத்த இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 17-ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கஞ்சி வாா்த்தல் மற்றும் அன்னதானம், மாலையில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 10-ஆம் நாள் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் காவிரி துலாக் கட்டத்தில் இருந்து சக்தி கரகம், தீச்சட்டி எடுத்தும், உடலில் அலகு குத்தி காவடி எடுத்தும், வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதையடுத்து, பக்தா்கள் தீமிதித்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com