பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கொழையூா் கோயில் கும்பாபிஷேகம்

News image

கொழையூா் அகஸ்த்யேஸ்வரா் கோயில் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:40 pm

மயிலாடுதுறை அருகேயுள்ள கொழையூா் அகஸ்த்யேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அகஸ்தியா், மாா்க்கண்டேயா் வழிபட்ட இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் அண்மையில் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், தமிழ் சேவா சங்க நிறுவனா் ஞான.சரவணவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.