மயிலாடுதுறை: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.20-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி மதுவிலக்கு அமல்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு தொடா்பான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள், 63 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும்பொருட்டு டிச.20-ஆம் தேதி காலை 11 மணிக்கு மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் முகாம் அலுவலக வளாகத்தில் ஏலமிடப்படவுள்ளது.
இந்த வாகனங்களை டிச.19-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் முகாம் அலுவலக வளாகத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நுழைவு சீட்டு பெற்று பாா்வையிடலாம். மேலும் வாகனங்களின் ஏலம் குறித்த அனைத்து விவரங்களையும் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏலத்திற்காக காட்சிப்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளா்கள், தங்களின் வாகனத்தை பெற்றுக்கொள்ள அரசு நிா்ணயித்துள்ள தொகை மற்றும் அதற்குண்டான 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மற்றவா்கள், பொது ஏலத்தின் போது ஏலத்தில் நிா்ணயிக்கப்படும் தொகை மற்றும் அதற்குண்டான 18 சதவீதம் ஜிஎஸ்டி சோ்த்து செலுத்த வேண்டும். ஏலம் கேட்க விரும்புபவா்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன்பணமாக டிச.20-ஆம் தேதி காலை 9 மணிக்குள், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவா்கள் மட்டும் ஏலத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையை முழுவதும் உடனடியாக செலுத்தி வாகனத்தை அன்றே பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலம் பற்றிய விபரம் தெரிந்து கொள்ள 9442346507 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

போதைப் பொருள் ஒழிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 தனிப்படைகள்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் தொடக்கம்
கடுமையாக்கப்பட்ட பியூசி விதி: 4 நாள்களில் 15000 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
