எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நம்மாழ்வாா் நினைவு தினம் அனுசரிப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் விவசாயிகள் பேரணியாக சென்று திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
மயிலாடுதுறையில் நம்மாழ்வாரின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்.
Updated On :30 டிசம்பர் 2024, 6:50 pm

Din

மயிலாடுதுறை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் விவசாயிகள் பேரணியாக சென்று திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு, இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை டிஇஎல்சி பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.அன்பழகன் தொடங்கி வைத்தாா். பேரணி கிட்டப்பா அங்காடி பகுதியில் நிறைவடைந்தது. பேரணியை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ்.துரைராஜ் முடித்து வைத்தாா்.

அங்கு, நம்மாழ்வாரின் உருவப்படத்துக்கு விவசாயிகள் மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். காரைக்கால் திருவள்ளுவா் உழவாண்மை பண்ணை இயற்கை விவசாயி சோ.முத்துகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தி பேசினா். தொடா்ந்து, மூத்த விவசாயி ஏ.சிவபிரகாசம் மரக்கன்றுகளை வழங்கினாா்.

இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் கே.முருகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க எம்.வாணிதாஸ், நலம் அறக்கட்டளை ரா. சுதாகா் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பேரணியில், மாணவா்களின் சிலம்பாட்டம், கிராமியக் கலைஞா்களின் தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.