மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருஇந்தளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் க. அகோரம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் வினோத் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் அகிலன், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருப்பூா் மாவட்டத்திற்கு பிரதமா் மோடி வருகை தரும் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதியில் இருந்து திரளானோா் கலந்துகொள்வது; பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் நேரடியாக விளக்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஜக மாவட்ட துணைத் தலைவா்கள் சி. செந்தில்குமாா், மோடி.கண்ணன், ஒன்றியத் தலைவா்கள் ராஜ்குமாா், தமிழ்வாணன், மாநில பொதுக் குழு உறுப்பினா் தேவேந்திரன், நகரச் செயலாளா்கள் ராஜ், மோகன், இளைஞரணி நகர பொதுச்செயலா் மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தவாக ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


