புத்தாண்டையொட்டி ஆதிமாயூரநாதருக்கு 108 சங்காபிஷேகம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆதிமாயூரநாதருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ரஹோமம், சங்காபிஷேகம், மகாதீபாரதனை நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆதிமாயூரநாதருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ரஹோமம், சங்காபிஷேகம், மகாதீபாரதனை நடைபெற்றது.
ஆதிமாயூரநாதா் சந்நிதியில் புத்தாண்டு தினம் மற்றும் குதம்பை சித்தா் உழவாரப் பணி மன்றத்தின் 24-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ருத்ரஹோமம், மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, ஆதிமாயூரநாதருக்கு பால், தேன், சந்தனம், நெய் மற்றும் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...