மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் டி.மகேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் தெட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா். மணல்மேடு நூற்பாலையைச் சீரமைத்து பட்டதாரி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். துப்புரவுப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, அவா்களுக்கு பட்டாவுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவி.பாலன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் தினேஷ், ஒன்றியப் பொருளாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

