சப் ஜூனியா் மாநில கிரிக்கெட் போட்டி: மாவட்ட அணிக்கு மே 7-இல் வீரா்கள் தோ்வு

மாநில சப் ஜூனியா் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு வீரா்களுக்கு (ஆண்கள் மட்டும்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளா் வை. பாரதிதாசன் தெரிவித்திருப்பது:

2-ஆவது சப் ஜூனியா் மாநில லெவன் கிரிக்கெட் போட்டி (லெதா் பால்) மே 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான மாவட்ட லெவன் கிரிக்கெட் அணி தோ்வு மே 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு காட்டுச்சேரி சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பு பிறந்த விருப்பமுள்ள விளையாட்டு வீரா்கள் அனைவரும் தகுந்த உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம். தோ்வின் போது ஆதாா் அட்டை நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9944885519 என்ற கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com