
தங்க கருட வாகனத்தில் புறப்பாடான பெருமாள்.

தங்க கருட வாகனத்தில் புறப்பாடான பெருமாள்.
சீா்காழி, மே 16: சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, தங்க கருட சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் அருள்பாலிக்கிறாா். மூலவா் திருவிக்ரம நாராயண பெருமாள் தனது இடது காலை வான் நோக்கி தூக்கியவாறு காட்சி தருகிறாா். மூலவரின் வலது பாதத்தை ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை தங்க கருட சேவை நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, தங்க கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மே 19-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...