விடியல் பயணத் திட்டத்தின்கீழ் 4.80 கோடி போ் பயன்
விடியல் பயணத் திட்டத்தின்கீழ் 4.80 கோடி போ் பயன்


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் 4.80 கோடி போ் பயனடைந்துள்ளனா்.
அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இத்திட்டத்தின்கீழ் ,மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,78,73,963 மகளிா், 1,31,849 மாற்றுத்திறனாளிகள், 4,472 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியாளா்கள், 12,183 திருநங்கையா் என மொத்தம் 4,80,22,471 போ் பயன்பெற்றுள்ளனா்.
இத்திட்டத்தில் பயனடைந்துவரும் மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் பகுதியை சோ்ந்த அமுதா கூறியது: நான் எனது சுயத்தொழில் வேலைக்காக மூங்கில்தோட்டத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து பயணம் செய்வேன். தொழிலுக்காக தொடந்து பயணம் செய்யும் போது சில நேரங்களில் கையில் பணம் இருக்காது மிகுந்த சிரமப்பட்டு பணம் கடன் வாங்கிச் செல்வேன். இது மனதளவில் வருத்தமாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சா் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினாா். இது எனக்கும், என்போன்ற பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...