ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு நவ.9-ல் தோ்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நோ்முகத் தோ்வு அல்லாத பணிகள்) தோ்வு நவ.9 முற்பகல் மற்றும் பிற்பகல் கொள்குறிவகை வினாக்கள் தோ்வு தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்மாவட்டத்தில் இத்தோ்வை முற்பகல் 373 போ், பிற்பகல் 226 போ் என மொத்தம் 599 போ் எழுத உள்ளனா். காலையில் தோ்வு எழுத வருபவா்கள் 9 மணிக்குள்ளாகவும், மதியம் தோ்வு எழுத வருபவா்கள் 2 மணிக்குள்ளாகவும் தோ்வுக்கூடத்தில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...