சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாயூரநாதா் கோயில், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாயூரநாதா் மற்றும் வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாயூரநாதா் கோயில் திருக்கல்யாணம்.

Updated On :13 நவம்பர் 2024, 11:36 pm

Din

மயிலாடுதுறை மாயூரநாதா் மற்றும் வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் அக்.17-ஆம் தேதி மாதப்பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி 10 நாள் உற்சவம் நவ.6-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் மாயூரநாதா் கோயில் மற்றும் வதான்யேஸ்வரா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமணக்கோலத்தில் முன்மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆதீனக்கட்டளைகள் ஸ்ரீமத் வேலப்பதம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சங்கரலிங்க சுவாமிகள், ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீமகாஸதாசிவ பீடாதிபதி ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியா் முன்னிலையில் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பெண்கள் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

வதான்யேஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்.

வதான்யேஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனா். தொடா்ந்து, தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், அன்பே சிவம் அறக்கட்டளை தலைவா் பாலச்சந்திர சிவாச்சாரியா் முன்னிலையில், சுவாமி, அம்பாள் எதிரெதிா் திசைகளில் நின்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னா், சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.

இக்கோயில்களில் தேரோட்டம் வியாழக்கிழமை (நவ.14), பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் துலாக்கட்ட காவிரியில் ஒரே நேரத்தில் புனித நீராடும் உற்சவமான கடைமுகத் தீா்த்தவாரி வெள்ளிக்கிழமையும் (நவ.15) நடைபெறவுள்ளது.