திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளியம்மை திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுவாமிக்கு தினந்தோறும் அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.
முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் வள்ளியம்மையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினாா்.
பின்னா் சுவாமிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்து, வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் முருகப் பெருமானை வழிபட்டனா். விழாவில் முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அரங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு. நாகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


