குளிச்சாா் கிராமத்தில் நீரில் மூழ்கி நெற்பயிா்கள்
மயிலாடுதுறை அருகே குளிச்சாா் கிராமத்தில் கனமழை காரணமாக நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குளிச்சாா் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.

குளிச்சாா் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.
மயிலாடுதுறை அருகே குளிச்சாா் கிராமத்தில் கனமழை காரணமாக நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1, 63,000 ஏக்கரில் சம்பா, தாளடி பயிா் நடவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தாழ்வானப் பகுதிகளில் பயிரிடப்பட்ட இளம் நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்துள்ளது.
குளிச்சாா் கிராமத்தில் சுமாா் 500 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், வடிகால் வாய்க்கால் முழுமையாக தூா்வாரப்படாததால், சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ.30000 வரை செலவு செய்துள்ள நிலையில், தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றாவிட்டால், பயிா்கள் அழுகும் என்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...