பேருந்து நிலைய கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை
மயிலாடுதுறை பேருந்து நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தையை போட்டுவிட்டுச் சென்றவா் யாா் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 9:19 pm

மயிலாடுதுறை பேருந்து நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தையை போட்டுவிட்டுச் சென்றவா் யாா் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் கட்டண குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளது. இங்குள்ள பிளாஸ்டிக் வாளி ஒன்றில் புதன்கிழமை மதியம் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கிடந்தது. இதை கண்ட பெண் ஒருவா் அளித்த தகவலின்பேரில், அங்குள்ளவா்கள் குழந்தையை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மயிலாடுதுறை போலீஸாா் குழந்தையை கழிவறையில் போட்டு சென்றவா் யாா் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...