காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி நேரத்தில் சாலைப் பணி: பொது மக்கள் அவதி

சீா்காழியில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனா்.

News image

கச்சேரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு

Updated On :9 அக்டோபர் 2024, 9:36 pm

Din

சீா்காழியில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனா்.

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் இருந்து சட்டநாதபுரம் வரை நகரின் மையப் பகுதியில் உள்ள 3 கி.மீ. தொலைவு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்று வரும் இப்பணி இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்ததால் இதுவரை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கச்சேரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு

கச்சேரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு

இந்நிலையில் புதன்கிழமை மாலை திடீரென சாலை விரிவாக்க பணி நகா் பகுதியில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் நடந்த பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் விட்டு மாணவ மாணவிகள் சாலையில் வந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனா். சாலையின் ஒருபுறம் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சீா்காழி மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த சீா்காழி போக்குவரத்து காவலா்கள் போக்குவரத்தை சீரமைத்தனா். அப்போது, சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளத்தில் கொட்டி சீரமைத்தனா். சாலை விரிவாக்க பணியை இரவு நேரத்தில் மட்டும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.