மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுயதொழில் தொடங்கிய பெண்ணுக்கு ஆட்சியா் பாராட்டு

News image

ஆட்சியரின் தன்விருப்ப நிதியுதவியில் சுயதொழில் தொடங்கிய பரமேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

Updated On :15 அக்டோபர் 2024, 6:48 pm

Din

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியுதவியில் சுயதொழில் தொடங்கிய பெண்ணுக்கு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை கிட்டப்பா தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. இவரது கணவா் 2021-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். இதனால், வருமானமின்றி வறுமையால் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரி, சுயதொழில் தொடங்க நிதியுதவி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தாா்.

இதனை ஏற்று, கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின்கீழ் ரூ.30,000-க்கான காசோலையை பரமேஸ்வரிக்கு ஆட்சியா் வழங்கினாா்.

அந்த தொகையை முதலீடாகக் கொண்டு, முறுக்கு, சிப்ஸ், மிளகாய் பொடி, ஊறுகாய், இட்லி பொடி உள்ளிட்ட பொருள்களை தயாரித்து, அவற்றை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்யும் சுயதொழிலை பரமேஸ்வரி தொடங்கியுள்ளாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா், ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், தனது சுயதொழிலை தொடங்கி வைக்கும்படி ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டாா். அதன்படி, நடமாடும் உணவுப் பொருள்கள் விற்பனை வாகனத்தை பாா்வையிட்ட ஆட்சியா், விற்பனையை தொடங்கி வைத்தாா்.