பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

News image

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த தருமபுரம் ஆதீனம், மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.

Updated On :6 செப்டம்பர் 2024, 11:41 pm

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உள்ள செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், வியாழக்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கி, 2 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி ஆகியோா் முன்னிலையில், புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விமான கலசங்களில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.