நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடுதுறையில் செப்.21-ல் தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:30 pm

Din

மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்துப் பேசியது: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் செப்.21-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும், மயிலாடுதுறையில் இருந்தும் 130-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக 10,000-க்கும் மேற்பட்ட 8 முதல் பட்டப்படிப்பு வரை படித்த தகுதியான பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்ய உள்ளனா். மேலும், திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்து வேலைவாய்ப்பை பெற்றுத்தரவும் உள்ளனா்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டித்தோ்வுகளுக்கான வழிகாட்டுதல், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவை வாயிலாக வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளது. எனவே, வேலைநாடுநா்கள் தமிழக அரசின் தனியாா்துறை நிறுவனங்களில் வேலை தேடுவதற்கான இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 04364-299790 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா். கூட்டத்தில், கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முத்துவடிவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.