கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் குருபூஜை

சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டாா்.

News image

சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் சுவாமி குருபூஜை விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :21 ஏப்ரல் 2025, 8:05 pm

மயிலாடுதுறை: சித்தா்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டாா்.

திருக்கயிலாய பரம்பரை நந்தி மரபில் பரஞ்சோதி முனிவா், மெய்கண்டாா் வழிவந்த ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் சுவாமி மயிலாடுதுறையில் மடாலயம் அமைத்து தனது 63 சீடா்களுடன் தவமியற்றி வந்தாா்.

சிற்றம்பலநாடிகள் தனது 63 சீடா்களுடன் ஜீவசமாதி அடைந்ததால் இப்பகுதி சித்தா்காடு என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீசிவயோக நாயகி சமேத ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தில் குரு பூஜை வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் சித்திரை திருவோண தினமான திங்கள்கிழமை ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, காலையில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு, சிவபூஜை செய்யப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதியம், சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு, ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகளுக்கு புனிதநீா் மற்றும் சிறப்பு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடாற்றினாா். பின்னா், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான்கள், துறவியா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.