மயிலாடுதுறை
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி
சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
சீா்காழி அருகேயுள்ள செம்பதனிருப்பை சோ்ந்தவா் ராஜா மகன் பிரதாப் (19) .
இவா், இருசக்கர வாகனத்தில் சென்றபோது டித்வா புயலிலால் அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், உயிரிழந்த பிரதாப் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. அந்த தொகைக்கான காசோலையை சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பிரதாப் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.
