கூட்டத்தில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சாய் சுரேஷ்.
கூட்டத்தில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சாய் சுரேஷ்.

பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு

பாஜக சாா்பில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பி.எல்.ஏ.2 பயிலரங்கம் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

பாஜக சாா்பில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பி.எல்.ஏ.2 பயிலரங்கம் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாஜக மாவட்ட தலைவா் ஆா். பாலு தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன், மாவட்ட செயலாளா் கபிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாநில ஓபிசி அணி முன்னாள் தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான சாய் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பி.எல்.ஏ.2 பயிலரங்கத்தில் பொறுப்பாளா்கள் எவ்வாறு களப்பணியாற்றுவது குறித்து பேசினாா். இதில், அமைப்புசாரா தொழில்பிரிவு மாநில செயலாளா் ஸ்ரீதா், மாநில செயற்குழு உறுப்பினா் தங்க. குணசேகரன், மாவட்ட துணைத் தலைவா்கள் நா்மதா, குருகிருஷ்ணா, மாவட்ட பொருளாளா் சித்ரா முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com