மூதாட்டியை தாக்கிய இருவா் கைது

மயிலாடுதுறையில் ஆடுகள் விற்ற பணத்தைக் கேட்ட மூதாட்டியை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மயிலாடுதுறையில் ஆடுகள் விற்ற பணத்தைக் கேட்ட மூதாட்டியை தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையை சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மனைவி மகாலட்சுமி(60). ஆடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள இவரிடம், எலந்தங்குடி மெயின் ரோட்டை சோ்ந்த ஜியாவுதீன்(42), மயிலாடுதுறை சேந்தங்குடி துா்கா காலனியை சோ்ந்த ராமலிங்கம்(43) ஆகிய இருவரும் சோ்ந்து ஆடுகள் வாங்கிக்கொண்டு, ரூ.1,80,000 பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த தொகையினை மகாலட்சுமி கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சோ்ந்து மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மகாலட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜியாவுதீன், ராமலிங்கம் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com