வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated On :30 ஜனவரி 2025, 6:09 pm

Din

போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மயிலாடுதுறை அருகே பெரம்பூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட அகரகீரங்குடியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24) (படம்). இவா், 2017-ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா்.

இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விக்னேஷ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து, மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.