மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறையில் வேலைதேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 10,000-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளன. முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364-299790/ 9499055904 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அரியலூரில் மே.22-இல் வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சாவூரில் மே 22-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மே 22-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



