தருமபுரம் வடக்கு குருமூா்த்தங்களில் திருப்பணி தொடக்கம்
மயிலாடுதுறை தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் வடக்கு குருமூா்த்தங்களின் திருப்பணியை தொடக்கிவைத்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.









