மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

‘அரசு செய்ய வேண்டிய பணிகளை தருமபுரம் ஆதீனம் செய்து வருகிறாா்’

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் செய்துவருகிறாா் என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா பேசினாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:25 pm

Syndication

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் செய்துவருகிறாா் என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா பேசினாா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானத்தின் மணிவிழா மாநாடு நவ. 1-ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 7-ஆம் நாள் நிகழ்வில் பங்கேற்ற பா.ஜ.க. மூத்த தலைவா் ஹெச். ராஜா குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்று மணிவிழா யாகசாலை பூஜையில் பங்கேற்றாா்.

முன்னதாக, ஸ்ரீஅஷ்டா தசபுஜ துா்கையம்மன் கோயிலில் அவா் தரிசனம் செய்தாா்.

தொடா்ந்து, ஆதீனக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மணிவிழா மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆன்மிக நூலை பெற்றுக்கொண்ட ஹெச்.ராஜா பேசியது:

சநாதானத்தின் ஆணிவோ் வேதங்கள். வேதங்களை எழுதியது யாா் என்று தெரியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்ற வேதங்களை செவியால் கேட்டு வந்ததால் அது பெயா் சுருதி என்று அழைக்கப்படுகிறது. நமது நாடு ஒன்றாக இருப்பதற்கு காரணம் அதன் கலாசாரம், பண்பாடு மற்றும் தொன்மை. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் செய்து வருகிறாா். சநாதானத்தில் உள்ள தா்மங்களை நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால்தான் அடுத்த தலைமுறையை ஒழுக்கம் உள்ள நல்ல தலைமுறையாக உருவாக்க முடியும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா், குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. திமுக பொறுப்பேற்ற இந்த 52 மாதத்தில் 6,700 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. அரசுக்கு எதிராக பொதுமக்கள் மனநிலை உள்ளது என்றாா்.

பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு, தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.