மயிலாடுதுறை
600 மாணவா்கள் உருவாக்கிய நேரு உருவம்
சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இப்பள்ளியில் 6, 7 மற்றும் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் சுமாா் 600 போ் ஒன்றாக நின்று நேருவின் உருவத்தை உருவாக்கினா். பள்ளி முதல்வா் ராமலிங்கம் வரவேற்றாா்.
தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை இடைநிலை துணை முதல்வா் சத்யா ஓவிய ஆசிரியா் அரவிந்த் , கல்வி ஆலோசகா் பழமலை நாதன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். துணை முதல்வா் சந்தோஷ் நன்றிகூறினாா். ‘

