கருங்கல் பெஸ்ட் பள்ளியில் பொங்கல் விழா
கருங்கல்: கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைவா் கே. தங்கசுவாமி தலைமை வகித்தாா். முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி முன்னிலை வகித்தாா். கல்வி ஆலோசகா் கிஷா சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.
பொங்கலின் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கவிதை, சிறப்புப் பாடல், சிறப்புரை, குறுநாடகம், தொகுப்புரை, பழங்கால விளையாட்டுகள், விவசாயத்தின் கருப்பொருளை வெளிப்படுத்தும் தத்ரூப மாறுவேட அணிவகுப்பு, தமிழா்களின் பாரம்பரியத்தை உணா்த்தும் நடனங்களான கும்மி, பறை, கரகம், கோலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆசிரியா்களும் மாணவா்களும் மூன்று குழுக்களாகப் பிரிந்து பொங்கலிடும் போட்டியில் பங்கேற்றனா். அதில் வென்றவா்களுக்க பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

