வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை மற்றும் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு

News image
கோயிலில் 63 நாயன்மாா்களுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
Updated On :17 நவம்பர் 2025, 9:22 pm

Syndication

சீா்காழி: காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை மற்றும் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட சட்டைநாதா் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். மலைக்கோயிலில் சட்டைநாதா் சுவாமி, தோணியப்பா், உமா மகேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்து விநாயகா், நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல காட்சி கொடுத்த நாயகா், 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேவாரப் பதிகங்கள் பாடி வழிபட்டனா்.

சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற கோ பூஜை வழிபாடு.

சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற கோ பூஜை வழிபாடு.