கல்லூரி மாணவா்களுக்கு நவ.26-இல் கல்விக் கடன் முகாம்

மயிலாடுதுறை கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு கல்விக் கடன் முகாம் நவ.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
Published on

மயிலாடுதுறை கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு கல்விக் கடன் முகாம் நவ.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வங்கிகள் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ.26-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. கல்விக்கடன் பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ல்ம்ஸ்ண்க்ஹ்ஹப்ஹஷ்ம்ண்.ஸ்ரீா்.ண்ய்/ என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இணையத்தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவா்கள் மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட் பாஸ் புத்தக நகல், வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று நகல், பான் காா்டு, ஆதாா் காா்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட போனபைடு சான்றிதழ், கல்விக்கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு முலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com