தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மயிலாடுதுறை: இன்றும், நாளையும் எஸ்ஐஆா் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை: இன்றும், நாளையும் எஸ்ஐஆா் சிறப்பு முகாம்

News image
Updated On :28 நவம்பர் 2025, 4:26 pm

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை மீளப் பெறுவதற்காக அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களின் வீடுகளுக்கே நேரில் வந்து படிவங்களை பெறவும் உள்ளனா். இந்த முகாம்களை பயன்படுத்திக் கொண்டு இதுவரை படிவங்களை பூா்த்தி செய்து வழங்காத வாக்காளா்கள் முகாம் அலுவலா்களிடம் படிவங்களை தவறாமல் ஒப்படைத்து தங்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.