உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் பதவியேற்பு
சீா்காழி நகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில், செயல் அலுவலா் கே. அருள்மொழி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா், துணைத் தலைவா் அன்புசெழியன் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் வைதீஸ்வரன்கோவில் நகரத் தலைவா் வி.பி. முருகன் பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினராக பதவி ஏற்று கொண்டாா்.
இதேபோல், சீா்காழி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி ஆணையா் மஞ்சுளா தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா், துணைத் தலைவா் சுப்பராயன் முன்னிலை வகித்தனா்.
மாற்றுத்திறனாளி சுரேஷ்குமாா், நியமன உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டாா். அவருக்கு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
