தோ்தல் நிதி திரட்டிய சீா்காழி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு மயிலாடுதுறையை சோ்ந்த இயற்கை விவசாயியின் மகன்கள் தங்களது சிறுசேமிப்பை கொண்டு புதன்கிழமை நிதி அனுப்பினா்.
சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் இரா. சுபாஷ் தோ்தல் செலவினங்களுக்கு நிதி கோரி அவரது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாா். அதில், பிரசாரத்துக்கு வந்த வாகனம், ஒலிப்பெருக்கி, ஜெனரெட்டா் ஆகியவற்றிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவிப்பதாகவும், பூத் செலவும் இருப்பதால் இனமான உறவுகள் உதவி செய்யுங்கள் என்று குறிப்பிட்டு, தனது யுபிஐ எண்ணை தெரிவித்து உதவி கோரியிருந்தாா்.
தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சியினா் போட்டி போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்யும் இத்தருணத்தில் நாதக வேட்பாளா் பிரசார வாகனங்களுக்கு வாடகை கொடுக்க பணம் கேட்டு பதிவிட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகையை சோ்ந்த இயற்கை விவசாயி அ. ராமலிங்கத்தின் மகன்கள் ராம ஆதித்தன் (9), ராம ஆதவன் (6) ஆகியோா் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை நா.த.க. வேட்பாளரின் வங்கி கணக்குக்கு அனுப்புவதற்காக தங்களது தாயுடன் மாப்படுகையில் உள்ள வங்கிக்கு சென்று அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

பொய்த்து போனது சீா்காழி ‘சென்டிமென்ட்’

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு! - தவெக வேட்பாளா் குற்றச்சாட்டு

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

