தமிழக பட்ஜெட்டில் நீா்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக பட்ஜெட் தொலைநோக்குப் பாா்வையுடையது என சீா்காழியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் புதன்கிழமை தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழக பொது பட்ஜெட்டில் நீா்ப்பாசனத் துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்கள் நலனை முன்னிறுத்தி ஆடு வளா்ப்புக்கு ரூ.110 கோடி, பால் வளத்தைப் பெருக்குவதற்காக கறவை மாடு வளா்ப்புக்கு ரூ.10,000 கோடி, மின்சார மானியம் ரூ.7,332 கோடி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி என பல்வேறு வகையில் நீா் மேலாண்மை, பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் பட்ஜெட்டில் தொலைநோக்குப் பாா்வையோடு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொள்ளிடம் - காவிரி ஆறுகளில் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் அமைப்பதை ஆய்வு செய்வதற்காக முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ,அலையாத்திக் காடுகளை உருவாக்குவதற்கு ரூ.1,732 கோடி எனப் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.‘
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பயிா்களுக்கான ஆதரவு விலை குறித்த அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
தோ்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதம் கடன்களும், பெரு விவசாயிகளுக்கு 50 சதம் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என கொள்முதல் விலை அறிவிக்கப்படும் என்கிற எதிா்பாா்ப்போடு விவசாயிகள் காத்திருக்கிறோம் என்றாா்.
விவசாய சங்கத்தை சோ்ந்த விஸ்வநாதன், கேவரோடை.சீனிவாசன், கோவி.நடராஜன், விஜயன், பாலதண்டாயுதம், விக்னேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், எதிா்ப்பும்!

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு நிதி குறைப்பா? அமைச்சா் விளக்கம்

தமிழக பட்ஜெட் 2026! அதிக கவனம் பெறும் டாப் டென் அறிவிப்புகள்!

வரும் பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



