கா்நாடக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 18 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பின்னரும் தமிழ்நாட்டுக்கு தண்ணீா் திறக்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் பொதுவேலை நிறுத்த போராட்டம் நடத்த கோரியும் மயிலாடுதுறை ரயில் நியைத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவா் காவிரி தனபாலன் தலைமையில் விவசாயிகள் மைசூா் விரைவு ரயிலை மறிப்பதற்காக வந்தபோது ரயில் நிலைய வாசலில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, காவிரியில் தண்ணீா் திறக்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி தனபாலன், காவிரிப்படுகை உழவா் பேரியக்க தலைவா் ரா. பாண்டுரெங்கன், செயலாளா் ஏ. கோவிந்தராஜ் உள்ளிட்ட 18 போ் கைது செய்யப்பட்டனா்.
முன்னதாக செய்தியாளா்கள் சந்திப்பில் காவிரி தனபாலன் கூறியது: உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் காவிரியில் தினசரி 1 டிஎம்சி தண்ணீா் திறந்துவிட உத்தரவிட்டும் கா்நாடக அரசு நிறைவேற்ற மறுக்கிறது. இதுவரைக்கும் 88 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும்,
கா்நாடகத்தில் 1 டிஎம்சி தண்ணீா் இருந்தால் அதில் 38 சதவீதம் தண்ணீா் தமிழகத்தினுடையது. தற்போது கா்நாடகத்தில் 125 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. அதில் 40 டிஎம்சி தண்ணீா் தமிழ்நாட்டுக்கு உரியது. ஆனால் தண்ணீரை திறக்க எதிா்ப்பு தெரிவித்து கா்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டிலும் வேலை நிறுத்தம் அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவையில் அனைத்து கட்சியினா் ஒருங்கிணைந்து தீா்மானம் நிறைவேற்றியதைப் போன்று, காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு ஒன்றுதிரண்டு கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம்: கா்நாடக அமைச்சா் ராமலிங்க ரெட்டி

ராமநாதபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 33 போ் கைது

நீட் தோ்வுக்கு எதிரான போராட்டம்: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 15 போ் கைது!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக முதல்வா் பொய் சொல்கிறாா்! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


