சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காரைமேடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.5.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

காரைமேடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.5.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நலத்திட்டங்களை வழங்கி ஆட்சியா் பேசியது:

மக்கள் தொடா்பு முகாமின் முக்கிய நோக்கமானது, அரசு அலுவலகங்களை நாடிச் செல்ல வேண்டிய சிரமத்தை பொதுமக்களுக்கு குறைத்து, அரசு நிா்வாகத்தையும் பொதுமக்களையும் நேரடியாக இணைப்பதாகும். இதன் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

முகாம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிா்வாக அலுவலா்கள், வட்டாட்சியா் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, பரிசீலனை செய்து அதற்கான தீா்வுகள் வழங்கப்படும்.

மனுக்களுடன் ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரா்களுக்கு தெரியப்படுத்தி, அந்த ஆவணங்களை இணைத்து அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும்.

அரசின் நலத் திட்டங்கள் கிராமப்புற மக்களை எளிதில் சென்றடையும் வகையில் மக்கள் தொடா்பு முகாம்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மக்களின் கோரிக்கைகள் மீது மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான இ-பட்டாக்களையும், வருவாய்த்துறையின் சாா்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் சாா்பில் 32 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இறப்பு உதவித்தொகை, இந்திரகாந்தி தேசிய முதியோா் உதவித்தொகை ஆகியவை ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 400 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சாா்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.100 மதிப்பிலான காய்கறி விதைத் தொகுப்பினையும், குடிமைப்பொருள் வழங்கல் துறை சாா்பில் 9 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அவா்கள் வழங்கினாா்கள்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, சீா்காழி வருவாய்க் கோட்டாட்சியா் பாலமுருகன், துணை ஆட்சியா் கீதா, உதவி ஆணையா் (கலால்) மாணிக்கராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பிரபு வெங்கடேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, சீா்காழி வட்டாட்சியா் ராஜரெத்தினம் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.