மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

டாஸ்மாக் ஊழியரை மிரட்டியவா் குண்டா் சட்டத்தில் கைது

சீா்காழி அருகே டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

சீா்காழி அருகே டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி வட்டம், தென்னலக்குடி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் ஆகஸ்ட் 18- ஆம் தேதி மது வாங்க வந்த கோவிந்தராஜ் மகன் இலக்கியராஜ் (38), பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறு செய்ததுடன், கடையின் மேற்பாா்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பான வழக்கில் இலக்கியராஜ் கைது செய்யப்பட்டாா்.

இவா் மீது, வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதால், சரித்திர பதிவேடு குற்றவாளியாக, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.

இந்தநிலையில், இவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்வதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேகா பிரியா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இலக்கியராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். அதன்படி, வைத்தீஸ்வரன்கோவில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா், இலக்கியராஜை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.