மயிலாடுதுறை
மாணவா்களுக்கு மடிக்கணினி
புத்தூா் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 356 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினாா். கல்லூரி முதல்வா் குமாா் வரவேற்றாா்.
பேராசிரியா்கள், அதிகாரிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
