சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.
மயிலாடுதுறை
சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை
சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு பூம்புகாா் பழைய ஆறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேரம் செல்ல செல்ல கன மழை பெய்யத் தொடங்கியது.
காலை 8:30-க்கு மேல் கன மழையாக ஒரு மணி நேரத்துக்கு நீடித்ததால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவா்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா். மாலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தவாறு இருந்தது. மேலும் அவ்வப்போது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

