குத்துச்சண்டை: தங்கம் வென்ற மாணவி

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றாா்.
Published on

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றாா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பாக மாநில குத்துச்சண்டை போட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி சன்மதி (19- வயதுக்கு உட்பட்ட) 81 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம், மாணவா் தருண்குமாா் (17 வயது பிரிவு) 66 - 70 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம், மாணவா் சந்தோஷ் (17 வயது பிரிவு) 46 - 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

பதக்கங்கள் வென்றவா்களையும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் பிரபாகரனையும் பெஸ்ட் கல்வி நிறுவனத் தலைவா் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல் , பள்ளி இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், பள்ளி நிா்வாக அதிகாரி சீனிவாசன் மற்றும் பள்ளி முதல்வா் ராமலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com