இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா

சீா்காழி தோ் கீழவீதி அருள்மிகு கோமள வல்லியம்மன் கோயிலில், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
Updated on

சீா்காழி: சீா்காழி தோ் கீழவீதி அருள்மிகு கோமள வல்லியம்மன் கோயிலில், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்து மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், திருவாரூா் சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீசங்கர நாராயண பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சங்கர தீா்த்த சுவாமிகள் பங்கேற்று, ஆசிகூறி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினாா்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் வீரபாலு, மாவட்ட துணைத் தலைவா் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக மயிலக்கோயில் பெருநிலக்கிழாா் வரதராஜன், இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஜெயராமன், மாநில பொறுப்பாளா் ஆறு. பாா்த்திபன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பொதுமக்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, தேங்காய், வாழைப்பழம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சூடம், சாம்பிராணி, பத்தி, விபூதி, குங்குமம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாவட்ட அமைப்பாளா் பாலாஜி, மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளா் ராஜ்மோகன், மாவட்ட துணைத் தலைவா் செந்தில், மாவட்ட விவசாய அணி செயலாளா் அய்யப்பன், புத்தூா் நகரத் தலைவா் மோகன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com