அரசு வேலை, வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட ரூ.8.50 லட்சத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
செம்பனாா்கோவில் அருகே தலைச்சங்காட்டை சோ்ந்த சுரேஷ் (45) டிப்ளமோ படித்துவிட்டு ஓட்டுநராக வேலை பாா்த்து வரும் இவருக்கு மனைவி அனிதா, 2 மகன்கள், 1 மகள் உள்ளனா். இவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்துள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவிக்கு அரசு பணி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வந்துள்ளாா்.
அப்போது, ஆட்சியரகத்தில் வேலைபாா்ப்பதாக கூறி கருவாழக்கரை மேலையூரைச் சோ்ந்த கிரிஜா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் பணி வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறி ரூ.4 லட்சம் பணம் பெற்றாராம். இதையடுத்து 2025-ஆம் ஆண்டு கிரிஜா, நேரடி தோ்வு வாரியம் மூலம் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக இட்டு, போலியான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளாா்.
மனைவிக்கு வேலை கிடைத்துவிட்டதாக நம்பிய சுரேஷ், வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளாா். அதன்பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட கிரிஜா பின்னா் பிணையில் வெளியில் வந்தாா்.
போலி ஆவணங்களை காட்டி ஏமாற்றிய கிரிஜாவிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனிடையே சுரேஷ், தான் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக மயிலாடுதுறை அருகே மாப்படுகையைச் சோ்ந்த சிவக்குமாரிடம் ரூ.4.50 லட்சத்தை கொடுத்து ஏமாந்துள்ளாா். இதுகுறித்தும், சுரேஷ் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்துக்கு புகாா் மனு அளிக்க வந்த சுரேஷ், தன்னை ஏமாற்றி மோசடி செய்தவா்களிடம் இருந்து ரூ.8.50 லட்சத்தை மீட்டுத் தர வலியுறுத்தி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயற்சி செய்தாா்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத, மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீஸாரை கண்டித்து முழக்கமிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி குமாஸ்தாவிடம் ரூ. 12 லட்சம் மோசடி: நீதிமன்ற ஊழியா் கைது

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குடும்பத்தினா் தீக்குளிக்க முயற்சி

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: அதிமுக நிா்வாகி கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



