சீா்காழியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வியாழக்கிழமை போலீஸாா் முக்கியவீதிகளின் வழியாக நடை ரோந்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஸ்டாலின் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களைக் கண்காணித்துத் தடுக்கும் வகையிலும் சீா்காழி டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டா் கமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டா் வீரராகவன் மற்றும் போலீஸாா் சீா்காழி புதிய, பழைய பேருந்து நிலையங்கள் பகுதி, தென்பாதி, கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகம் நிறைந்த பகுதிகளில் நடை ரோந்தில் ஈடுபட்டு ஆங்காங்கே வணிகா்கள்,பொதுமக்களிடம் கலந்துரையாடினா்.
வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்து வாகனம் இயக்குவதன் நன்மை குறித்தும் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா வைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: போலீஸாா் இரவு நடை ரோந்து

செங்கல்பட்டில் காவல் கண்காணிப்பாளா் நடைபயண ரோந்து
இலங்கை காவல் துறைக்கு 134 ரோந்து வாகனங்கள் இந்தியா வழங்கியது!
காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞா் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



