/
மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் அருகில் சித்தா்காடு சந்தைப்பேட்டையில் மாலதி என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது. இந்த தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கும் பரவி 3 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகின.
வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ ஆறுதல் கூறி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5,000, அரிசி, மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினாா்.
தொடர்புடையது

யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம்

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு






